ஒரு நாயகன் உதயமாகிறான்; முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோ? தீவிர பயிற்சியில் லோகேஷ் கனகராஜ்…

2 weeks ago 21
ARTICLE AD BOX

மோஸ்ட் வாண்டட் இயக்குனர்

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சௌபின், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

lokesh kanagaraj introduce as hero in action movie

ஆமிர்கானுடன் இணையும் லோகி

“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து “கைதி 2” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இத்திரைப்படம் “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் உருவாகவுள்ளது. 

“கைதி 2” திரைப்படத்தை தொடர்ந்து ஆமிர்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் என ஆமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். 

lokesh kanagaraj introduce as hero in action movie

முதல் படமே ஆக்சன் ஹீரோ

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு “ராக்கி”, “சாணி காயிதம்”, “கேப்டன் மில்லர்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில்தான் இவர் லோகேஷ் கனகராஜ்ஜை ஹீரோவாக வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இத்திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெறவுள்ளதாம். மேலும் இத்திரைப்படத்திற்காக பாங்காக்கில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு ஒரு அட்டகாசமான தகவல் வெளியாகியுள்ளது. தான் நடிக்கவுள்ள முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோவாக களமிறங்கவுள்ளது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

  • lokesh kanagaraj introduce as hero in action movie ஒரு நாயகன் உதயமாகிறான்; முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோ? தீவிர பயிற்சியில் லோகேஷ் கனகராஜ்…
  • Continue Reading

    Read Entire Article