ARTICLE AD BOX
டிரெண்டிங் இசையமைப்பாளர்
சினிமா இசையமைப்பாளர்களை பொறுத்தவரை அவர்கள் இசையமைத்த திரைப்படம் ஒன்று வெளியாகி அதன் ஆல்பம் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகுதான் அந்த இசையமைப்பாளருக்கு வாய்ப்புகள் குவியும். சில நேரங்களில் இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் கூட பெரிய ஹீரோ திரைப்படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அமையுமா? என்பதிலும் சந்தேகம்தான். ஆனால் சாய் அப்யங்கரை பொறுத்தவரை இந்த நிலையை அவர் என்றோ கடந்துவிட்டார். அதுவும் மூன்று தனி ஆல்பங்களின் மூலம் மட்டுமே.
சாய் அப்யங்கரின் “கட்சி சேர” என்ற ஆல்பம் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து “ஆச கூட”, “சித்திர புத்திரி” ஆகிய பாடல்களும் வரிசையாக ஹிட் அடிக்க அவர் டிரெண்டிங்காக வலம் வரத்தொடங்கினார். அதனை தொடர்ந்து கோலிவுட் திரையிசையுலகம் அவரை தனதாக்கிக்கொண்டது.
8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்!
இவ்வாறு மூன்று ஆல்பம் பாடல்களே வெளிவந்திருந்த நிலையில் சாய் அப்யங்கர் தொடர்ந்து பல பெரிய ஹீரோ திரைப்படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். முதலில் ராகவா லாரன்ஸின் “பென்ஸ்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சாய் அப்யங்கர், அதனை தொடர்ந்து சூர்யாவின் “கருப்பு”, பிரதீப் ரங்கநாதனின் “Dude”, சிம்புவின் “STR 49”, அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட புராஜெக்ட், சிவகார்த்திகேயனின் “SK 24”, மலையாளத்தில் “பல்டி” ஆகிய திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமானார்.
இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் சாய் அப்யங்கர். அதாவது “டாணாக்காரன்” இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “மார்ஷல்” திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். சாய் அப்யங்கரின் இசையில் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் வரிசையாக 8 பெரிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
— Karthi (@Karthi_Offl) July 10, 2025

3 months ago
45









English (US) ·