ARTICLE AD BOX
வெளியான டிரெயிலர்
தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை சுனில் நரங், புஸ்கர் ராம் மோகன் ராவ், அஜய் கைகாலா ஆகியோர் தயாரித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இத்திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா கடந்த 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த விழா தள்ளிப்போனது. இந்த நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் Pre Release Event நடைபெற்ற நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் வெளிவந்தது.
இதுதான் கதை…
இத்திரைப்படத்தின் டிரெயிலரில் இடம்பெற்ற காட்சிகளை பார்க்கும்போது, பிச்சைக்காரராக இருக்கும் தனுஷை நாகர்ஜுனா தனது சொந்த காரியத்திற்காக பணக்காரராக வேஷம் போட வைக்கிறார், இறுதியில் தனுஷே நாகர்ஜுனாவின் பிரச்சனையாக உருவெடுக்கிறார், இதுதான் இத்திரைப்படத்தின் கதைக்கரு என யூகிக்க முடிகிறது.
தனுஷ் எப்போதும் நடிப்பின் அரக்கன்தான், அதனை தனியாக கூறத்தேவையில்லை. “குபேரா” திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என டிரெயிலர் பார்க்கும்போது தெரிய வருகிறது. மேலும் இத்திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாக நகரும் வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் என டிரெயிலரை பார்க்கும்போது அறிய முடிகிறது. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான “ராயன்” திரைப்படத்திற்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. அந்த வகையில் “குபேரா” திரைப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 months ago
54









English (US) ·