ARTICLE AD BOX
இவ்வளவு இழுபறியா?
2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்” நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதன்படி “வாடிவாசல்” என்ற டைட்டிலோடு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடாமலே இருந்தது. சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
புகைப்படத்தை வெளியிட்ட தாணு
இந்த நிலையில்தான் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என ஒரு பேட்டியில் தாணு கூறினார்.
ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்
ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தாணு அறிவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆகஸ்து மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.