ARTICLE AD BOX
இன்னும் 7 நாட்களில்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு உள்ளது.

வெளிநாடுகளில் “கூலி” திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் விரைவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு “கூலி” Fever அதிகரித்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
இந்த நிலையில் “கூலி” படத்தின் இசையமைப்பாளரான அனிருத் “கூலி” படத்தின் பின்னணி இசைக்கான பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

படம் வெளியாக இன்னும் 7 நாட்களே உள்ளது. இது போக வெளிநாடுகளில் படத்தை வெளியிட படத்தை மிக விரைவில் பதிவேற்றவேண்டும். மேலும் QUBE-ல் இப்படத்தை பதிவேற்ற வேண்டும். இது போல் பல பணிகள் இருக்கும் நிலையில் அனிருத் இன்னும் படத்திற்கான பின்னணி இசை பணிகளை முடிக்கவில்லை என்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
