ARTICLE AD BOX
தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டுமென்றால், ஒவ்வொரு முறைக்கும் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என மனைவி கண்டிஷன் போட்டதாக கணவர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்ரி வருகிறார். இவருக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு பிந்துஸ்ரீ என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான நாளில் இருந்து தம்பதி ஒற்றுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என பிந்துஸ்ரீ உறுதியாக கூறியதாகவும், தனது அனுமதியின்றி கணவர் தொடக்கூடாது என்றும், மீறி தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஒரு கட்டத்தில், கணவருடன் வாழாமல் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் பிந்துஸ்ரீ.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “திருமணம் ஆனதில் இருந்து தாம்பத்திய உறவு நடக்கவில்லை. குழந்தை பெற்றால் தனது அழகு கெட்டுப்போய் விடும் என்பதால் குழந்தையைத் தத்தெடுக்கலாம் என எனது மனைவி கூறிவிட்டார்.
என்னை மீறித் தொட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன். என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால், ஒவ்வொரு முறைக்கும் 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். விவாகரத்து வழங்க வேண்டுமென்றால் 45 லட்சம் ரூபாய் கேட்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பதில் சொல்வாரா விஜய்? இன்னும் 8 நாட்கள் தான்.. தவெகவினர் தீவிரம்!
இதனையடுத்து, இந்த மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், பிந்துஸ்ரீயிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டு தன்னை மிரட்டுவதாக பிந்துஸ்ரீ புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 months ago
73









English (US) ·