ARTICLE AD BOX
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ் இன் உறவில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு அவர்களது காதல் முறிந்துபோனது. அதனை தொடர்ந்து சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியருடன் லிவ் இன் உறவில் இருந்தார்.

ஆனால் அந்த காதலும் ஒரு கட்டத்தில் முறிந்துப்போனது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன், தனது காதல் முறிவுகளை குறித்து மிகவும் வெளிப்படையாகவும் அதே நேரத்தில் மனம் நொந்தபடியும் பேசியுள்ளார்.
உனக்கு எத்தனை பாய் ஃப்ரெண்டு?
“எனது அப்பாவும் அம்மாவும் விவாகரத்து பெற்றபோதே என்னுடைய வாழ்க்கை கடினமாக ஆகிவிட்டது. எனக்கென்று நிலையான உறவு இதுவரை இருந்ததில்லை. நான் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் போய்விட்டேன் என்றால் மிகவும் ஆழமாக சென்றுவிடுவேன்.
ஆனால் அது விட்டுச்சென்ற பின் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன். இது எத்தனையாவது பாய் ஃப்ரெண்டு என மக்கள் கேட்கும்போது அவங்களுக்கு அது வெறும் நம்பரா தெரியக்கூடும். ஆனால் என்னை பொறுத்தவரை நான் விரும்பிய அன்பை பெறமுடியாமல் எத்தனை முறை தோற்றுப்போய் உள்ளேன் என்பதை காட்டும் நம்பர்” என்று மிகவும் மனம் நொந்தபடி அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் “கூலி”, “டிரெயின்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
