ARTICLE AD BOX
கவுண்ட்டர் மணி…
கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல மேடை நாடகங்களிலும் வீதி நாடகங்களிலும் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்த இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகராக கோலோச்சினார்.
சமீபத்தில் கூட “ஒட்ட ஓட்டு முத்தையா” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன் கவுண்டமணி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி
கவுண்டமணி தான் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு ஒவ்வொரு காட்சிக்கும் சக நடிகர்களுடன் ரிகர்சல் பார்ப்பாராம். அந்த ஒத்திகையில் என்ன வசனம் பேசப்பட்டதோ அதே வசனத்தைதான் Take எடுக்கையிலும் பேசவேண்டுமாம். சக நடிகர் ஒரு வார்த்தை அதிகமாக பேசினால் கூட “நீ ஒத்திகை பார்க்கும்போது இந்த டயலாக் எல்லாம் பேசலையே. ஏன் இப்படி எக்ஸ்ட்ராவா டயலாக் சேர்க்குற. வேணாம், என்ன வசனம் ஒத்திகை அப்போ பேசுனியோ அதை மட்டும் பேசு” என்று அங்கேயே கடிந்துகொள்வாராம். இவ்வாறு கவுண்டமணி மிகவும் கறாராக இருப்பார் என பயில்வான் ரங்கநாதன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.