ARTICLE AD BOX
திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (48) இவர் மக்காச்சோளத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த சரவணன் மனைவி சங்கீதா(38) இனிப்பு வகை மக்காச்சோளத்தை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாக ராஜ்குமாரிடம் தெரிவித்தார்.
ராஜ்குமார் தனக்கும் இனிப்பு வகை மக்காச்சோளம் வேண்டும் என்று சங்கீதாவிடம் கேட்டுள்ளார்.
அப்போது மக்காச்சோளத்தை வழங்கும் விவசாயிகளின் வங்கி கணக்கு விவரங்களை தருவதாகவும் அதில், பணத்தை செலுத்தினால் உடனடியாக மக்காச்சோளத்தை அனுப்பி வைப்பதாக சங்கீதா தெரிவித்தார்.
ராஜ்குமார், சங்கீதா அனுப்பிய வங்கி கணக்குகளில் தனித்தனியாக பிரித்து ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 செலுத்தினார்.
ஆனால், சங்கீதா மக்காச்சோளத்தை அனுப்பவில்லை. இது குறித்து ராஜ்குமார் விசாரணை செய்யும் போது சங்கீதா தனது நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் வங்கி கணக்குகளை கொடுத்து ரூ.10,73,67,906 பணத்தை ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் இடம் ராஜ்குமார் புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், சேலத்தில் இருந்த சங்கீதா மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார். முக்கியமாக குற்றம் சாட்டப்பட்ட சங்கீதாவை மட்டும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 month ago
38









English (US) ·