ARTICLE AD BOX

சென்னையில், இன்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25) காலை மட்டும் ஒரே நாளில் 7 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன்படி, திருவான்மியூர், கிண்டி, சைதாப்பேட்டை, பெசன்ட் நகர், பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகியபகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, திருவான்மியூரின் இந்திரா நகரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் உள்ள சாஸ்திரி நகரிலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. கிண்டி மைதானத்தில் காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தப் பெண்ணிடம் 5 சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், சைதாப்பேட்டையில் பெண்ணிடம் ஒர் சவரன், வேளச்சேரி மற்றும் பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் தலா ஒரு பெண்ணிடமும் நகை பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை நேரத்தில் நடந்த இந்த 7 செயின் பறிப்பு சம்பவங்களில் 26 சவரன் நகைகள் பறிபோய் உள்ளன.

இந்த அனைத்து சம்பவங்களிலும் ஒரே கும்பல்தான் ஈடுபட்டிருக்கலாம் என்றும், பைக்கில் வந்த இரண்டு பேராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். இதனையடுத்து, செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபல நடிகரின் மகளை 5 நிமிடம் விடாமல் லிப் லாக் செய்த நடிகர் : படப்பிடிப்பில் ஷாக் சம்பவம்!
இதனிடையே, செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து மும்பை வழியாக உபி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The station ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்.. வெளியான பகீர் தகவல்! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.