ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

3 months ago 47
ARTICLE AD BOX

சென்னையில், இன்று (மார்ச் 25) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு 8 ஆயிரத்து 100 ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் 65 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Gold and silver price today

அந்த வகையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, இன்று (மார்ச் 25) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 240ரூபாய் குறைந்து 65 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: ’கவர்னர்’ பீடி.. ’அப்பா’ சொன்னார்.. ஆளுநர் மேடையில் பார்த்திபன் ‘நச்’ பேச்சு!

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 8 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி மாற்றம் இல்லாமல் 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

  • Parthiban in Governor house ’கவர்னர்’ பீடி.. ’அப்பா’ சொன்னார்.. ஆளுநர் மேடையில் பார்த்திபன் ‘நச்’ பேச்சு!
  • Continue Reading

    Read Entire Article