ARTICLE AD BOX
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாகவும், 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கதாநாயகியாகவும் வலம் வருகிறார்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த நடிகை என்ற பெருமையும் உண்டு. தற்போதைய கால நடிகர்களுடனும் ஜோடி போட்டு வருகிறார்.
இந்த நிலையில் திரிஷா எப்டி ஹீரோயின் ஆனார் என்பது குறித்து நடிகர் ராதாரவி கூறியுள்ள விஷயம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ராதாரவி கூறியதாவது, ஒரு படத்துக்காக மும்பையை சேர்ந்த நிலாவோ நீலிமாவோ ஒரு நடிகை வரவேண்டியிருந்தது.
ஆனால் அவர் வருவதற்கு லேட் ஆனதால், அங்குள் ஆறு ஏழு பெண்களில் அழகாக இருந்த திரிஷாவை தூக்கி ஹீரோயினாக போட்டனர்.
இதுதாங்க சினிமா, தலையில் என்ன எழுதிருக்கோ அதன்படிதான் நடக்கும். தலைவிதியில் இருந்து யாரும தப்ப முடியாது என அந்த வீடியோவில் ராதாரவி கூறியுள்ளார்.

8 months ago
85









English (US) ·