ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

4 days ago 9
ARTICLE AD BOX

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு உட்பட்ட ரெண்டாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் மகன் சீனு என்கிற கிருஷ்ணகுமார் (51). இவர் ரெண்டாடி பாஜக ஊராட்சி மேம்பாட்டுத் துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்டச் செயலாளராக உள்ளார்.

இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும், சீனு, ரெண்டாடி கிராமத்தில் கோழி இறைச்சிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் தனது விவசாய நிலத்திற்கு தனியாக நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நிலக் கிணற்றின் அருகே இவரை மடக்கிப் பிடித்து கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத சீனு அங்கிருந்து தப்பிச் சென்றபோதும், அவரைப் பின்தொடர்ந்த நபர்கள் ஓட ஓட கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

Ranipet BJP

இதனையடுத்து, அவர்களின் நிலத்தின் வழியாகச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் சீனு கிடப்பதைக் கண்டு, அவரது குடும்பத்திற்கு தகவல் அளித்துள்ளார். பின்னர், சோளிங்கர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

இதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த நபரை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்த சீனிவாசன் பாஜக நிர்வாகியாகவும், அவர் மீது சோளிங்கர் மற்றும் பொன்னை காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படும் நிலையில், முன் விரோதம் காரணமாக இக்கொலைச் சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

  • Ilayaraja Symphony நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!
  • Continue Reading

    Read Entire Article