ARTICLE AD BOX
FATMAN ரவீந்தர் கைது?
லிப்ரா புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
சமீப காலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு பிரபல யூட்யூப் சேன்னலில் “FATMAN” என்ற பெயரில் விமர்சனம் செய்து வந்தவர்தான் ரவீந்தர் சந்திரசேகர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கெடுத்து பிரபலமானார். இந்த நிலையில் ஒரு மோசடி வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய மும்பை போலீஸார் சென்னை வந்ததாக தகவல் வெளிவருகிறது.

ரூ.5.24 கோடி மோசடி?
அதாவது பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி மும்பையைச் சேர்ந்த ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் ரூ.5.24 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்ய மும்பை போலீஸார் சென்னை வந்ததாகவும் ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு முன் 2023 ஆம் ஆண்டு தொழிலதிபர் பாலாஜி என்பவரிடம் ரூ.16 கோடி மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். அதன் பின் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
