ARTICLE AD BOX
விண்வெளி நாயகன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை கமல்ஹாசன், மணிரத்னம், ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க கேங்கஸ்டர் கதையம்சத்தை மையப்படுத்திய திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்தான ஒரு முக்கிய தகவலை உறுதிசெய்துள்ளார் கமல்ஹாசன்.
தலைகீழ் ஆன வியாபாரம்?
அதாவது பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து 4 வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிவிடும். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்து வந்தது. அந்த வகையில் கமல்ஹாசன் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான ஒப்பந்தத்தையும் போட்டுள்ளார் கமல்ஹாசன்.
இத்தகவலை “தக் லைஃப்” புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் உறுதிபடுத்திய கமல்ஹாசன், “இது சினிமாத்துறையை ஆரோக்கியமான ஒன்றாக மாற்றும்” என்று கூறியுள்ளார்.