ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

2 months ago 28
ARTICLE AD BOX

ஃபேவரைட் நடிகை

தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் என்றாலும் தமிழில் “பேட்ட”, “மாஸ்டர்”, “மாறன்”, “தங்கலான்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “தங்கலான்” திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. 

malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train

தற்போது தெலுங்கில் “ராஜா சாப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது தமிழில் கார்த்தி நடித்து வரும் “சர்தார் 2” திரைப்படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மாளவிகா மோகனன், தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தான ஒரு அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.

முத்தம் கொடு…

மாளவிகா மோகனன் கேரளாவில் பிறந்தவர் என்றாலும் அவர் மும்பையில்தான் வசித்துவந்தார். அவரது 19 ஆவது வயதில் ஒரு நாள் தனது இரண்டு தோழிகளுடன் மும்பை புறநகர் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்துகொண்டிருந்தாராம். 

அந்த பெட்டியில் மாளவிகா மோகனன் மற்றும் அவரது இரண்டு தோழிகள் மட்டுமே இருந்தார்களாம். வேறு யாரும் இல்லையாம்.

மூவரும் ஜன்னல் சீட்டுகளில் அமர்ந்து ஜன்னல் கம்பியில் முகத்தை சாய்த்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தார்களாம்.

malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train

அப்போது அந்த ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நின்றதாம். அந்த சமயத்தில் நடைமேடையில் இருந்த ஒரு நபர் ஜன்னல் அருகே ஓடி வந்து அவரது முகத்தை ஜன்னல் அருகே வைத்துக்கொண்டு “எனக்கு ஒரு முத்தம் தருவியா” என்று கேட்டாராம். அந்த நபர் அப்படி கேட்டதும் அவர்களுக்கு திகைப்பாக இருந்ததாம். என்ன செய்வது என்றே தெரியவில்லையாம். நாம் எதாவது திட்டி அந்த நபர் ரயிலுக்குள் ஏறிவிட்டார் என்றால் என்ன செய்வது என்று பயந்து எதுவும் பேசாமல் இருந்துவிட்டார்களாம். அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே மிகவும் சிரமப்பட்டார்களாம். இவ்வாறு அப்பேட்டியில் தனக்கு நடந்த அதிர்ச்சி சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டார். இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • malavika mohanan shared the bad experience when she was 19 year old in mumbai local train ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!
  • Continue Reading

    Read Entire Article