ARTICLE AD BOX
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழகத்தில் பா.ஜ.க.-அ.தி.முக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி ஆட்சி குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும். அதனை பெரிய தலைவர்கள் கவனித்துக் கொள்வார்கள். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறிவிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சி இணையுமா? என்றால், எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்டமான கட்சியாகவே இருக்கும். தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து திருச்சி சிவா எம்.பி. பேசிய கருத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மிகப் பெரிய தலைவரை கொச்சைப்படுத்தியுள்ளனர். அதற்கு மன்னிப்புக் கூட கேட்கவில்லை. “அப்படியே விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார். முதலமைச்சரும் அவரைக் கண்டுகொள்ளாமல், இதில் சிலர் குளிர் காய நினைப்பதாகவும், “விட்டுவிடுங்கள்” என்றும் கூறுகிறார்.
அவர்களுக்கு யாருக்கும் பயம் இல்லை. ஓட்டுக்கு மட்டுமே பயம். காமராஜர் செய்த பணிகள் குறித்து பேசுவதற்கு ஏராளமானவை உள்ளன.
காமராஜர் திருச்சியில் பெல் தொழிற்சாலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதை சிவா எம்.பி. முதலில் சென்று பார்க்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் காங்கிரஸ், தி.மு.க.வுடன் ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறது.
