ஓரங்கட்டியவர்களை இழுக்கும் திமுக.. தவெக உட்கட்டமைப்பால் விறுவிறுப்பா?

1 week ago 6
ARTICLE AD BOX

மாநிலம் முழுவதும் தவெகவின் தாக்கத்தை உணர்ந்து திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நபரான திருநெல்வேலி அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்​கப்​பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்​பட்​டுள்ளது. அது மட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து வந்த ஈரோடு தோப்பு வெங்க​டாசலம், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரையும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு​களில் இருந்து ஒதுக்​கிவைக்​கப்பட்ட செஞ்சி மஸ்தானையும் மாவட்டப் பொறுப்​பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏனென்றால், இப்படி, கட்சிக்குள் அதிருப்​தி​யுடன் இருந்த மக்கள் செல்வாக்​குள்ள நபர்கள் எல்லாம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் பக்கம் திரும்பி​விடாமல் இருக்கவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். முக்கியமாக, திமுகவிலிருந்து தவெகவுக்கு சிலர் போகலாம் என உளவுத் துறை தந்த தகவலின் அடிப்​படையில் இத்தகைய நடவடிக்கைகளை திமுக தலைமை வேகப்​படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதை அறவே மறுத்துள்ளார், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான். இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசியுள்ள அவர் “திமுகவில் மாவட்டப் பொறுப்​பாளர்கள் நியமனம் என்பது கட்சியைப் பலப்படுத்தும் மற்றும் தேர்தலுக்கான ஒரு யுக்தி.

TVK Vijay

தவெகவுக்கு பயந்துதான் தலைமை இப்படிச் செய்கிறது என்று சொல்வது பேதமை. மற்ற கட்சிகளில் இருந்து நீக்கப்​பட்​ட​வர்கள்தான் திமுகவுக்கு வருகின்றனரே தவிர, திமுக​விலிருந்து யாரும் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. அதுமட்டுமல்​லாமல், திமுகவிலிருந்து நீக்கப்​பட்​ட​வர்கள் கூட தவெக பக்கம் இதுவரை செல்ல​வில்லை.

இதையும் படிங்க: ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!

இவ்வாறு இருக்கும் போது தவெகவின் பலம் என்ன? நிலைப்பாடு என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் ​தி​முகவுக்கு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தவெக உடன் 2021 தேர்தலில் திமுகவுடன் வேலை பார்த்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இணைந்திருப்பதால் திமுகவுக்கு சற்று சலசலப்புடனே காணப்படுகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

  • No One Replace Captain Vijakanth விஜயகாந்த்னா அது ஒருத்தர்தான்… அவர் இடத்தை ஒருத்தரும் : ராகவா லாரன்ஸ் அதிரடி!
  • Continue Reading

    Read Entire Article