ஓஹோ! அடுத்த படம் இவரோடதானா? டாப் நடிகருடன் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்!

2 weeks ago 18
ARTICLE AD BOX

சிறந்த ஃபீல் குட் திரைப்படம்

சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஒரு சிறந்த ஃபீல் குட் திரைப்படமாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மனிதம்தான் முக்கியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவான இத்திரைப்படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். 

பொருளாதார சரிவு காரணமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக ஓடிவரும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் எப்படி எப்படி எல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறது, அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மற்ற குடும்பத்தினர் இவர்களை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா? காவல்துறையின் கண்களில் இருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பதை நகைச்சுவை கலந்த கதையம்சத்துடன் படமாக்கி ரசிகர்களின் இதயத்தை தொட்டுள்ளார் அபிஷன். 

nani congratulate tourist family director abishan jeevinth

இத்திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன் ஆகியோருடன் யோகி பாபு, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், எஸ் எஸ் ராஜமௌலி போன்ற பல சினிமா பிரபலங்கள் பாராட்டி வரும் நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி நடிகர் ஒருவர் இயக்குனர் அபிஷனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். 

அடுத்த படம் இவரோடதானா?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். நானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அபிஷன், “உங்களை சந்தித்ததை நான் கௌரவமாக எண்ணுகிறேன் நானி சார். நீங்கள் மிகவும் பணிவான ஒரு மனிதர். நீங்கள் திரைப்படத்தை குறித்து மிகவும் விரிவாக பேசியது எனக்கு விசேஷமான ஒன்று. மிக்க நன்றி” என குறிப்பிட்டுள்ளார். 

What a day! Truly honoured to have met you, @NameisNani sir. You’re such a humble and grounded person. The way you spoke about the film in such detail made it more special for me. Thank you 🙂 pic.twitter.com/pKpHbeDycQ

— Abishan Jeevinth (@Abishanjeevinth) June 14, 2025

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், “நானியை வைத்து ஒரு ஃபீல் குட் திரைப்படத்தை இயக்குங்கள் அபிஷன்” என்று கூறிவருகின்றனர். 

  • nani congratulate tourist family director abishan jeevinth ஓஹோ! அடுத்த படம் இவரோடதானா? டாப் நடிகருடன் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் வெளியிட்ட புகைப்படம்!
  • Continue Reading

    Read Entire Article