கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?

3 months ago 42
ARTICLE AD BOX

தனது வெளிநாட்டு நண்பர்களை குடியுரிமை அதிகாரிகள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதாக பிரபல ராப் பாடகர் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை: பிரபல ராப் பாடகர் அசல் கோலார். வசந்தகுமார் எனும் இயற்பெயர் கொண்ட இவர், திரைத்துறையில் அசல் கோலார் என அறியப்படுகிறார். மேலும், நான் ரெடிதான் வரவா, யார்ரா அந்தப் பையன்.. நான் தான் அந்தப் பையன், என்ன சண்டைக்கு கூப்டா உள்ளிட்ட பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்தனர்.

இந்த நிலையில், திடீரென நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த இவர், தனது மலேசிய நண்பரை குடியுரிமை அதிகாரிகள் இழிவாக நடத்தியதாகவும், கஞ்சா வைத்திருக்கிறாயா என்று மிரட்டியதாகவும் புகார் அளித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசல் கோலார், “மலேசிய சிட்டிசனான என்னுடைய நண்பர் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் தங்கியிருக்கார்.

இவர் டூரிஸ்ட் விசாவில வந்தார். டூரிஸ்ட் விசா காலாவதியாகும் நேரத்தில், அவர் நாட்டில் இருந்து டூரிஸ்ட் விசாவை புத்துப்பித்திருக்கிறார். ஆனால், எங்களுக்கு இன்றுதான் தெரியும், டூரிஸ்ட் விசாவை நீட்டிக்க முடியாது என்று. அதற்காக, என் நண்பர் பல அலுவலங்களுக்கு அலைந்து முயற்சி செய்தார்.

Asal Kolaar

இன்று கடைசியாக குடியுரிமை அலுவலகம் வந்தபோது குடியுரிமை அதிகாரிகளிடம் இதைப் பற்றி கேட்டபோது, எங்கு தங்கி இருக்கிறாய் எனக் கேட்டனர். அதற்கு, என்னோடு, என் வீட்டில்தான் தங்கி இருக்கிறார் எனச் சொன்னேன். இங்கு எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்றார் என் நண்பர்.

இதையும் படிங்க: எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

அதன் பின்னர், அவர்கள் எடக்குமடக்காக கேள்வி கேட்டு வாக்குவாதமானது. அதில், குடியுரிமை அதிகாரிகள் என் நண்பரை ரூம் உள்ளே அழைத்துச் சென்று துன்புறுத்தி உள்ளனர். மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். அனைத்து ஆவணங்களையும் தந்த பிறகு இரண்டு நாள்களுக்குள் எல்லாம் சரி செய்து தருகிறோம் என்கிறார்கள்.

ஆனால், அதற்குள் என் நண்பரை அடித்து துன்புறுத்தி, கஞ்சா வச்சிருக்கியா என்றெல்லாம் கேட்டு மிரட்டி உள்ளனர். தமிழ்நாடு போலீசார் எங்களுக்கு உதவினர். ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நான் பிரபலமாக இருக்கவும், செய்தியாளர்கள் உதவியுடன் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டேன். ஆனால், சாமனிய மக்களெல்லாம் என்ன செய்வார்கள்” எனக் கேட்டுள்ளார்.

  • Asal Kolaar கஞ்சா வச்சிருக்கியா? நடுரோட்டில் கேட்ட அசல் கோலார்.. நடந்தது என்ன?
  • Continue Reading

    Read Entire Article