ARTICLE AD BOX
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா இயக்குநர்கள் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்க: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!!
சமீபத்தில் வெளியான ஆலப்புழா ஜிம்கானா, உண்டா, தள்ளுமால், அனுராக கரிக்கின் வெள்ளம், லவ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் காலித் ரகுமான். தமாஷா, பீமனின் வழி உள்ளிட்ட படங்களை இயக்கியர் அஷ்ரப் ஹம்சா. இவர் தள்ளுமால் படத்திற்கு எழுத்தாளராக பணியாற்றியிருந்தார்.
இந்த இரு இயக்குநர்களுடன் மற்றொருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஹைபிரிட் கஞ்சா வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலால் சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனையில் அது உறுதியானது. 16 கிராம் ஹைபிரிட் கஞ்சாவுடன் அதிகாலை 2 மணிக்கு கைதாகினர். மலையாள சினிமா உலகில் சமீப காலமாக போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடிகை ஷைன் டாம் சாகோ போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது புயலை கிளப்பிய நிலையல், தற்போது இரண்டு முக்கிய இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் பாலியல் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த புகார் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது போதைப் பொருள் பிடிபட்டுள்ளது கடவுளின் தேசம் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.

6 months ago
53









English (US) ·