ARTICLE AD BOX
விஜயின் ஜனநாயகன் ரிலீஸாகும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: 2026ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டி, ஜனவரி 9ஆம் தேதி விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஏனென்றால், தவெக கட்சியைத் தொடங்கியுள்ள விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசி படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஜனநாயகன் படம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, பராசக்தி படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ‘இந்த பொங்கல்’ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் பராசக்தி படமும் பொங்கல் வெளியீடு என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, பொங்கல் வெளியீட்டிற்கு பராசக்தி படத்தை வெளியிட திட்டமிடப்படுவதாக கூறியிருந்தார். இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, கோட் படத்தில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து ஒரு காட்சியில் நடித்திருந்தனர். அதோடு, அந்தக் காட்சியில் ‘துப்பாக்கியப் பிடிங்க சிவா’ என விஜய் சிவகார்த்திகேயனிடம் பேசியது, கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த நிலையில், விஜய் – சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளியானால், சிவாவுக்கு கேரியரின் உச்சமாக அமையும் எனவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பிரகதியின் காதலர் இந்த பிரபலமா? சாம் விஷால் இல்லையா? தேதியுடன் அறிவிப்பு!
முன்னதாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கோட். வணிக ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், விமர்சன ரீதியாக சற்று பின்னடைவைச் சந்தித்தது. அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

7 months ago
67









English (US) ·