ARTICLE AD BOX
இப்போதைக்கு கார் ரேஸ்தான்…
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து சினிமாவை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு கார் பந்தயங்களில் ஈடுபாடு காட்டி வருகிறார் அஜித்குமார். ஐரோப்பாவில் பல நாடுகளில் கார் பந்தயங்களில் தனது அணியோடு கலந்துகொண்டு வரும் அஜித்குமார் பல சர்வதேச பரிசுகளையும் வென்று வருகிறார். இந்த நிலையில் அஜித்குமார் கார் பந்தயங்களுக்காகவே தனியாக ஒரு யூட்யூப் சேன்னலை தொடங்கியுள்ளார்.
அஜித்குமார் ரேஸிங்
“அஜித்குமார் ரேஸிங்” என்ற இந்த யூட்யூப் சேன்னல் அஜித்குமார் பங்கெடுக்கும் கார் பந்தயங்களை நேரலையாக ஒளிபரப்பும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யூட்யூப் சேன்னல் தொடங்கப்பட்ட ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.
அஜித்குமார் வருகிற நவம்பர் மாதம் முதல் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கவுள்ளார். “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. எனினும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 months ago
50









English (US) ·