கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

2 weeks ago 18
ARTICLE AD BOX

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு நபர் நின்று கொண்டு இருந்தார்.

அவரைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சத்யவான் என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை செய்த காவல் துறையினர் அவர் வைத்து இருந்த பையில் சோதனை மேற்கொண்ட போது செய்தித் தாள்களில் சுற்றப்பட்ட இருந்த பார்சலில் 35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

மேலும் அதனை கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனை அடுத்து அதற்கான ஆவணங்களை கேட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 35,00,000 (ரூபாய் முப்பத்தைந்து லட்சம்) பணம் மற்றும் சத்யவானை சட்ட பூர்வ நடவடிக்கைக்காக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி (Income Tax officer Investigation) மதி ஆனந்திடம் ஒபப்டைத்தனர். தற்பொழுது அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.

  • vadivelu shared about the director who ordered him to go with script நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!
  • Continue Reading

    Read Entire Article