ARTICLE AD BOX
நெல்லை கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ள நிலையில் முத்துலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் ஒரு ஆண் மகன் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார் முத்துலட்சுமி.
நெல்லை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இருவரையும் அழைத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்த நடத்தி, மீண்டும் கணவன் வீட்டுக்கு முத்துலட்சுமி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை தூங்கி கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் மீது மனைவி தண்ணீர் ஊற்றி எழுப்பியுள்ளார்.இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்து. அப்போது கணவரின் வேட்டியை அவழித்து வயிற்று பகுதிக்கு கீழ் கொதிக்கும் எண்ணையை எடுத்து ஊற்றியுள்ளார்.
இதில் வயிற்றின் கீழ் பகுதியில் இருந்து கால் வரை வெந்த நிலையில் பாலசுப்பிரமணியன் அலறி துடிக்க, அக்கம் பக்கத்தின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிவந்திப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையல், பாலசுப்பிரமணியனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததே காரணம் என்றும், தற்போது முத்துலட்சுமியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.