ARTICLE AD BOX
கனவு கன்னி
கர்நாடக சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக கொடி கட்டி பறந்தவர்தான் பாவனா ராமண்ணா. இவர் தமிழில் “அன்புள்ள காதலுக்கு”, “நட்சத்திர காதல்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதும் இவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
40 வயது ஆகும் இவர் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதுதான் தற்போது பேசுபொருளாக ஆகியுள்ளது.

கர்ப்பமானது எப்படி?
திருமணமே செய்துகொள்ளாத இவர் தற்போது IVF (கருத்தரிப்பு) சிகிச்சையின் மூலம் இரட்டை குழந்தைகளுக்குத் தாயாகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் இதை சொல்வேன் என்று ஒரு போதும் நினைத்துப்பார்த்து இல்லை. ஆனால், இதோ இரட்டை குழந்தைகளுடன் ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளேன்.
எனது 20 மற்றும் 30 வயதுகளில் நான் தாயாக வேண்டும் என நினைத்தது இல்லை. ஆனால் இப்போது 40 வயது ஆகும் நிலையில் தாயாக வேண்டும் என்ற ஆசையை என்னால் மறுக்கமுடியவில்லை. பல IVF மருத்துவமனைகள் என்னை நிராகரித்தன. ஆனால் அதன் பிறகுதான் ஒரு நாள் டாக்டர் சுஷ்மாவை சந்தித்தேன். அவர் என்னை ஜட்ஜ் செய்யவில்லை. மிகவும் அன்போடு என்னை வரவேற்றார். அவரது ஆதரவுடன், முதல் முயற்சியிலேயே நான் கருத்தரித்துவிட்டேன்” என அப்பதிவில் பகிர்ந்துள்ளார். இச்செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
