ARTICLE AD BOX
அன்றே சொன்ன பயில்வான்…
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதுதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமலேயே ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மாதம்பட்டி ரங்கராஜும் ஜாய் கிரிஸில்டாவும் லிவ் இன் உறவில் இருக்கிறார்கள், அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என பல மாதங்களுக்கு முன்பே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்போது அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. அவர் சொன்னது வதந்தி என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த வதந்தி உண்மையாகியுள்ளது.
கணவனை பிரிந்த பெண்கள்தான் டார்கெட்!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், “ ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என 6 மாதங்களுக்கு முன்பே நான் ஒரு பிரபல யூட்யூப் சேன்னல் பேட்டியில் கூறியிருந்தேன். நான் பேசிய தகவல் எப்படியோ மாதம்பட்டி ரங்கராஜுக்கு சென்றுவிட்டது. அவர் அந்த யூட்யூப் சேன்னல் நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து, நான் சொன்னதெல்லாம் பொய் என்று சொல்லி அந்த செய்தியையே ஒளிபரப்பவிடாமல் செய்துவிட்டார்.
அந்த சமயத்தில் பலரும் ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என கம்மண்ட் செய்தார்கள். நேயர்களே, உங்களிடம் இருந்து நான் எப்படி அபிமானம் பெற்றிருக்கிறேன் என்றால், நான் சொல்கிற செய்திகள் அனைத்தும் உண்மையானவைதான். இது பலருக்கு எரிச்சலையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்துகிறது. நான் அன்று சொன்னது இப்போது உண்மையாகிவிட்டது.

எப்போதும் ஒருவர் Body Demand-ஐ கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள வேண்டும். Body Demand-ஐ அதிகளவில் வைத்திருந்தால் அவர்கள் குளோஸ். மாதம்பட்டி ரங்கராஜ், கணவனை விட்டு பிரிந்த நடிகைகளுக்கு மட்டுமே வலை போடுவார். விவாகரத்தான நடிகைகளுடன் நிறைய தொடர்பு வைத்திருக்கிறார். ஜாய் கிரிஸில்டாவிற்கு முன்பே விவாகரத்தான மூன்று நடிகைகளுடன் அவர் உறவு வைத்திருந்தார். இப்படித்தான் மேட்டர் ஓடிக்கொண்டிருக்கிறது” என மாதம்பட்டி ரங்கராஜை குறித்து விமர்சித்துள்ளார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
