ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சசிகலா. சசி கவுர் மல்கோத்ரா என்ற பெயர் கொண்ட கர்நாடகாவை சேர்ந்த இவர் சினிமாவுக்காக சசிகலா என்ற பெயரில் நுழைந்தார்.
தெலுங்கில் ஏராளமான படங்கள நடித்த அவர், இளமை காலங்கள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கமல், கார்த்திக், பிரபு, சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
இதையும் படியுங்க: மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?
தொடர்ச்சியாக கிளாமர் ரோலில் நடித்து வந்த அவருடன் ராஜேந்திர பிரசாத், மோகன் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இவர் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளரான சபிதா கூறியதாவது, 1993ல் மருத்துவரை திருமணம் செய்த சசிகலா, 2 மகன்களை பெற்றெடுத்தார்.
ஊர்மரியாதை படத்தில் கணவர் மீது சந்தேகம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த சசிகலாவுக்கு, நிஜ வாழ்க்கையில் அப்படியே தலைகீழ். கணவர் சந்தேகத்தால் வாழ்க்கையில் நொந்து போனார்.
சசிகலா கணவரின் டார்ச்சரால் 5 வருடங்களில் விவாகரத்து வாங்கினார். ஒளி இல்லம் என்ற கிறிஸ்தவ இல்லத்திற்கு சென்ற சசகிலா, அங்கு உள்ள ஒரு பெண், கணவரின் சித்வரதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், உடம்பு முழுவதும் சிகரெட் சூடுக்கு ஆளானதாக சசிகலாவிடம் கூறியுள்ளார்.
சாதாரண குடும்ப பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால், நடிகர்களுடன் ஒன்றாக நடித்த சசிகலாவுக்கு சொல்லவா வேண்டும் என சபிதா கூறினார்.

7 months ago
80









English (US) ·