ARTICLE AD BOX
கணவருடன் பிரிந்து வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா கோணசீமா மாவட்ட மெரகபாலம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்ற 22 வயது இளம்பெண்ணுக்கும் அவருயை உறவினர் ஒருவருக்கும் 4 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.
இதையும் படியுங்க: கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை… பரபரப்பு கடிதம் எழுதிய இபிஎஸ்!!
ஆனால் இருவருக்கும் ஒரு சில மாதங்களிலேயே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மேலும் புஷ்பா விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார்.
அங்கு பணிபுரிந்த வந்தபோது, ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷாம் என்ற 22 வயது இளைஞருடன் காதல் மலர்ந்தது.
இருவரும் காதலித்து வந்த நிலையில், சவரம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். ஆனால் ஷேக் ஷாம் மதுபோதைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையானார்.
இதையடுத்து அடிக்க புஷ்பாவிடம் பணம் கேட்டு தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதையடுத்து நேற்றைய முன்தினம் இரவு புஷ்பாவிடம் பணம் கேட்டு சண்டை போட்டுள்ளார்.
பணம் இல்லை என கூறியதும், கத்தியை எடுத்து புஷ்பாவை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபட வேண்டும், அவசரமாக பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.
 அதிர்ச்சியடைந்த புஷ்பா, மறுக்கவே, கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி புஷ்பாவை கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே அவர் சரிந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய ஷேக் ஷாம் மீது வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.
 
                        3 months ago
                                51
                    








                        English (US)  ·