ARTICLE AD BOX
கணவரை பிரியும் வாரிசு பட நடிகை
சமீப காலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருவது வாடிக்கையான நிகழ்வாக மாறிவருகிறது.அதிலும் பல பேர் காதலித்து திருமணம் செய்து பின்பு இருவருக்கும் ஒத்து போகவில்லை என பிரிந்து விடுகின்றனர்.
இதையும் படியுங்க: KJ யேசுதாஸ் உடல்நிலை முற்றிலும் வதந்தி..உண்மையை வெளியிட்ட மகன் விஜய் யேசுதாஸ்.!
இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை சம்யுக்தாவும் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.கார்த்திக் என்ற நபரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக என்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்,விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைபபடத்தில் நடிகர் ஷாமுக்கு ஜோடியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய விவாகரத்து பதிவிற்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.