ARTICLE AD BOX
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான “வீர தீர சூரன்” வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கிற்கு வந்தார்.அவரைப் பார்ப்பதற்காக அங்கே திரண்ட ரசிகர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதையும் படியுங்க: ‘டிராகன்’ படத்தால் VJ சித்துக்கு அடிச்ச லக்..!
விக்ரமை நேரில் காண ஆர்வமாக இருந்த சில ரசிகர்கள்,முதல் மாடியில் உள்ள கண்ணாடிகளை உடைத்து,ஆபத்தான முறையில் திரையரங்கிற்குள் செல்ல முயன்றனர்.மேலும்,திரையரங்கின் முன்பு அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை வெடித்ததால்,ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து,சுற்றுப்புறத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

திரையரங்கம் அமைந்துள்ள சாலை திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய சாலையாகவும்,காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள இடமாகவும் இருப்பதால்,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
விக்ரம் தனது காரில் இருந்து இறங்க முயன்றபோது,ரசிகர்கள் கார் மீது ஏறி கூச்சலிட்டனர்,அப்போது விக்ரம் காரின் உள்ளே அமர்ந்துகொண்டு இப்படி நீங்கள் பண்ணிட்டு இருந்தால் நான் எப்படி உள்ளே போவேன் என கோவமாக பேசினார்,பின்பு பவுன்சர்கள் அவரை மிகுந்த முயற்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றனர்.ஆனால்,பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாததால், ரசிகர்களை நேரில் சந்திக்காமல், விக்ரம் திரையரங்கில் இருந்து வெளியேறி சென்றார்.
இந்த சம்பவத்தால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.