ARTICLE AD BOX
லண்டனில் இளையராஜாவின் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டு, முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளார்.
லண்டன்: சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் படைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனி நம்பர் 1 வேலியன்ட் என்ற தலைப்பில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியை இளையாராஜா அரங்கேற்றியுள்ளார்.
செல்லோ, வயலின், பியானோ, ட்ரம்பட், டிரம்ஸ் உள்ளிட்ட இசைக் கருவிகள், ராஜாவின் இசைக்கு ஏற்ப இசைக்க ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்து 100 டெசிபெலுக்கு மேல் சென்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்களும், இளையராஜாவின் மகன்களுமான யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களால் தீயாகப் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும், இளையராஜா வெறும் 35 நாட்களில் 4க்கும் மேற்பட்ட மூமெண்ட்கள் கொண்ட சிம்பொனியை உருவாகியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து லண்டன் சென்ற இளையராஜா, இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு Eventim Apollo என்ற அரங்கத்தில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிம்பொனி மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: விரக்தியில் வெங்கட் பிரபு எடுத்த முடிவு…சாதகமாக அமையுமா..!
அது மட்டுமல்லாமல், ராஜா ராஜாதிராஜா, பூவே செம்பூவே, கண்ணே கலைமானே உள்ளிட்ட சில ஐகானிக் திரைப்பாடல்களையும் பிரமாண்ட ஆர்கெஸ்ட்ரா உடன் இசைத்து ரசிகர்களை மெய்சிலிர்க்கச் செய்தார்.
யார் இந்த இளையராஜா? தமிழகத்தின் தெற்கில் தேனி மாவட்டமானது ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தபோது, பண்ணைபுரத்தில் சின்னத்தாயின் மகனாகப் பிறந்தவர்தான் இளையராஜா. பாவலர் வரதராஜன் எனும் தனது சகோதரரால் இசை உலகிற்கு அழைத்து வரப்பட்ட இவர், கம்யூனிச மேடைகளில் கச்சேரி செய்து வந்தார். பின்னர், அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தனது இசைக்கு இன்று வரை பலரும் ஆட்கொண்டு வருகிறார்.

7 months ago
82









English (US) ·