கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

1 week ago 10
ARTICLE AD BOX

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், அடுத்தடுத்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

முதல் திருமணம் பிரியங்காவுக்கு தோல்வியில் முடிந்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த மாதம் திடீரென வசி என்பவரை 2வது திருமணம் செய்தது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: ‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

நெருக்கமானவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். பின்னர்தான் வசி என்பவரை பிரியங்காத காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அமீர் – பாவனி திருமணத்தை இருவரும் நடத்தி வைத்தனர்.

Sarath Talk About Priyanka Deshpande Second Marriage

இந்த நிலையில் பிரியங்கா குறித்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரத் பல விஷயங்களை கூறியுள்ளார். அதவாது, பிரியங்கா ஜாலியான ஒரு கேரக்டர், சுற்றியிருப்பவர்களை ஜாலியாக வைத்திருப்பார். ஆனால் அவருக்குள் ஆறாத காயங்கள் உள்ளது.

Priyanka Deshpande cried Vijay TV Fame Shared

அவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அதிகம். அவர் அழுது நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன், அவருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தால் அவருடைய நெருக்கமானவர்கள் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறோம். ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார், கதறி அழுதிருக்கிறார், இதெல்லாம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என பகிர்ந்துள்ளார்.

  • Priyanka Deshpande cried Vijay TV Fame Shared கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!
  • Continue Reading

    Read Entire Article