ARTICLE AD BOX
படுதோல்வி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது. அஜித் திரையில் வந்தால் மட்டுமே போதும் என்று பெரும்பாலும் நினைப்பவர்கள்தான் அஜித் ரசிகர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கே “விடாமுயற்சி” பிடிக்கவில்லை.
இத்திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. டிரைலர் கூட மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. லைகா நிறுவனத்திற்கு இத்திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாகவும் அமைந்தது.
பட வாய்ப்புகள் இல்லை
“விடாமுயற்சி” திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்பட்டு வந்தது. எனினும் மகிழ் திருமேனி அமிதாப் பச்சனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதாக இருந்ததாம்.
அதாவது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்தபோதே தனது அடுத்த திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனை அணுகினாராம். மகிழ் திருமேனி கூறிய கதை அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். எப்படியும் “விடாமுயற்சி” திரைப்படத்திற்குப் பின் அமிதாப் பச்சனை வைத்து படம் எடுத்துவிடலாம் என ஆவலோடு இருந்தாராம் மகிழ் திருமேனி.

ஆனால் “விடாமுயற்சி” வெளிவந்து படுதோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து மகிழ் திருமேனியால் அமிதாப் பச்சனை எவ்வளவு முயற்சி செய்தும் நெருங்கமுடியவில்லையாம். ஒரு சந்திப்புக்கு கூட வாய்ப்பு அமையவில்லை என தகவல் வெளிவருகிறது. மகிழ் திருமேனிக்கு இப்படி ஒரு நிலையா என கோலிவுட் வட்டாரங்களில் சோக அலை வீசுகிறதாம்.

6 months ago
57









English (US) ·