கதவை திறந்து பார்த்த பெற்றோர்… அலங்கோலமாக கிடந்த +2 மாணவி : பொள்ளாச்சியில் பகீர்!

4 weeks ago 21
ARTICLE AD BOX

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் அருகே உள்ள MGR நகர் பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் என்பவரது மகள் சரிகா. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் சரிகா கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்குச் சென்று மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது சரிகா இறந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படியுங்க: காதலனை நம்பி காட்டுக்குள் சென்ற காதலி.. 35 இடங்களில்.. இச்சையை தீர்த்து வெறிச்செயல்..!!

சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் சரிகாவுக்கும் காதலித்து வரும் காதலனுக்கும் இடையே தொலைபேசியில் சண்டை போட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

Pollachi +2 Student Take Tragedic Decision

காதலன் யார் என்பதை கண்டறிய மாணவி பயன்படுத்த தொலைபேசியை பறிமுதல் செய்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நாளில் பொள்ளாச்சி பகுதியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி கொலை மற்றும் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • thug life movie not release in karnataka reflect that tamil audience said that do not release kannada films in tamilnadu தக் லைஃப் பட விவகாரத்தின் எதிரொலி? போர்க்கொடி தூக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!
  • Continue Reading

    Read Entire Article