கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

1 week ago 23
ARTICLE AD BOX

தனுஷின் குபேரா

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுனில் நரங்க், புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தை  தயாரித்துள்ளார். 

தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்த விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

dhanush starring kuberaa movie full review

படத்தின் கதை 

மத்திய அரசின் எண்ணெய் வள ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஒரு லட்சம் கோடியை சட்டரீதியாக கைமாற்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் திட்டமிடுகிறார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே சிறையில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரியான நாகர்ஜுனாவிடம் உதவி கேட்கிறார். அதற்கு நாகர்ஜுனா ஒரு திட்டத்தை தீட்டுகிறார்.

அதாவது பிச்சைக்காரர்களை அழைத்து வந்து அவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கி அவர்களின் பெயரில் தொழில் நிறுவனங்களை தொடங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றத் திட்டமிடுகிறார். இதற்காக நான்கு பிச்சைக்காரர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் தனுஷ். இந்த பிச்சைக்காரர்களை வைத்து பணப்பரிவர்த்தனை நடக்கிறது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு பரிவர்த்தணை முடிந்த பிறகும் ஒவ்வொரு பிச்சைக்காரர்களாக கொன்றுவிடுகிறார்கள். அவ்வாறு தனுஷையும் கொலை செய்ய முயல்கிறார்கள். கடைசியில் இதில் இருந்து தனுஷ் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை. 

படத்தின் பிளஸ்

“குபேரா” படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது தனுஷின் நடிப்பு. பிச்சைக்காரராக வரும் சில காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்கவைத்துவிடுகிறார். அதே போல் தன்னை கொலை செய்ய முயலும்போது அதில் இருந்து தப்பிக்கும் தனுஷ் தனது நடிப்பின் மூலம் அந்த பதட்டத்தை நமக்கே கடத்துகிறார். இது தவிர நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தொழிலதிபராக வரும் ஜிம் சர்ப் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பது நிக்கேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு. குறிப்பாக குப்பைத் தொட்டி காட்சியில் அதகளம் செய்துவிட்டார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருந்தாலும் பின்னணி இசையில் மாஸ் காட்டிவிடுகிறார். படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக இருப்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ்.

dhanush starring kuberaa movie full review
படத்தின் மைனஸ் 

எனினும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பெல்லாம் அடங்கிவிடுகிறது. ஒரு பழி வாங்கும் கதையாகவே இது செல்வது படத்தை தொய்வடையச் செய்துவிடுகிறது. ரசிகர்களின் பொறுமையையும் சோதித்து விடுகிறது. இத்திரைப்படத்தின் இன்னொரு மைனஸ் படத்தின் நீளம். இவ்வளவு பெரிய படமாக இதை கொண்டு வந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. இது பார்வையாளர்களுக்கு சற்று தலைவலியை உண்டு செய்துவிடுகிறது. 

எனினும் தனுஷின் அபார நடிப்பு, பலமான கதை, விறுவிறுப்பான முதல் பாதி போன்ற சில விஷயங்கள் பார்வையாளர்களை அயர்ந்துபோகவிடாமல் செய்துவிடுகிறது. தனுஷிற்கு நிச்சயம் தேசிய விருது பார்சல்….

  • dhanush starring kuberaa movie full review கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்
  • Continue Reading

    Read Entire Article