கத்திப்பாராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. TNPL தொடரால் மனமுடைந்த இளைஞர்..!!

7 months ago 163
ARTICLE AD BOX
ka

கிண்டி அருகிலுள்ள கத்திப்பாரா பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இன்று காலை 10.15 மணியளவில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில், உயிரிழந்த மாணவர் விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்த சாமுவேல் ராஜ் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சாமுவேல் ராஜ் கிரிக்கெட் வீரர் எனவும், டி.என்.பி.எல். தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகின.

The station கத்திப்பாராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. TNPL தொடரால் மனமுடைந்த இளைஞர்..!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.

Read Entire Article