ARTICLE AD BOX
ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்க : தாக்கு பிடிக்குமா திமுக? பாஜகவின் மதுபான ஊழல் கருவி கைகொடுக்குமா?
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த போத்திநாராயணன் என்பவர் தையல் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் போத்திநாராயணன் தனது 19 வயதுடைய மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து வெளியே தெரிவித்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதை அடுத்து 19 வயதுடைய பெண் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த போத்தி நாராயணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.