ARTICLE AD BOX
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஆமிர்கான் “கூலி” திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் இணைந்துள்ள நிலையில் கமல்ஹாசனும் இத்திரைப்படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கமல்-ரஜினி காம்போ
அதாவது “கூலி” திரைப்படத்தின் தொடக்கத்தில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம்பெற்றால் அருமையாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இது குறித்து விரைவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் சம்மதத்தை பெற முயற்சி செய்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து 16க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளனர். 1985 ஆம் ஆண்டு “Geraftaar” என்ற ஹிந்தி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதுதான் அவர்கள் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம். அந்த வகையில் ஒருவேளை “கூலி” திரைப்படத்தில் கமல்ஹாசன் வாய்ஸ் ஓவர் கொடுக்க நேர்ந்தால் 40 வருடங்கள் கழித்து அவர்கள் மீண்டும் இணையும் திரைப்படமாக அது இருக்கும். இத்தகவல் ரசிகர்கள் பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
