கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்… 17 வருடம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகி!

1 month ago 19
ARTICLE AD BOX

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கர்நாடக மாநிலம் பங்களூருவில் காலமனார்.

1955ஆம் ஆண்டு மகாகவி காளிதாஸா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சரோஜா தேவி. கன்னடம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த சரோஜா தேவி தமிழில் திருமணம் என்ற படத்தில் 1958ஆம் ஆண்டு அறிமுகமானார்.

ஜெமினிக்கு ஜோடியாக நடித்த சரோஜா தேவி, பின்னர் சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன், ஜெய்சங்கர், எஸ்எஸ்ஆர் போன்றோருடன் நடித்தார்.

1958ஆம் ஆண்டு எம்ஜிஆருடன் நடித்த நாடோடி மன்னன் படம் சரோஜா தேவிக்கு பெரிய மைலகல்லாக அமைந்தது.

இதையும் படியுங்க: 7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.. கணவரை பிரிவதாக சாய்னா அறிவிப்பு!

சிவாஜியுடன் இணைந்த நடித்த புதிய பறவை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது, எம்ஜிஆருடன் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை சரோஜா தேவிக்கு உண்டு.

தமிழ், கன்னடம். தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படக்ஙலி நடித்த அவருக்கு வயது 87. கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படம். 2019ஆம் ஆண்டு Natasaarvabhowma என்ற கன்னட படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற விருமுதுகளை வென்ற சரோஜா தேவிக்கு வயது 87. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் அவர்,வயது மூப்பு உள்ளிட்ட உடல் பிரச்சனைகளால் இன்று காலமானார்.

Saroja Devi Passes Away

என்டிஆர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த பெருமை சரோஜாதேவிக்கு உண்டு. 17 வருடமாக தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகி என்ற பெருமையை பெற்ற சரோஜா தேவி மறைந்தாலும், அவரின் பவய்மான நடிப்பும், கொஞ்சி கொஞ்சி பேசும் குரலும் ரசிகர்களின் மனதை விட்டு என்றும் மறையாது.

  • Saroja Devi Passes Away கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி காலமானார்… 17 வருடம் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகி!
  • Continue Reading

    Read Entire Article