ARTICLE AD BOX
சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன்
நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி வருகிறார்.
1985ஆம் ஆண்டு கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படம்,ஒரு சென்டிமென்ட் கலந்த திரைப்படமாகும்.இதில் கமல்ஹாசன்,ராதா,ஸ்ரீவித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்க: மொக்க படத்தையும் WOW-னு சொல்லுறாங்க..சோசியல் மீடியாவால் ரசிகர்கள் ஏமாற்றம்..பிரபலம் பகீர்!
கதையில்,கமல்ஹாசனின் பேரனாக ஒரு முக்கியமான கதாபாத்திரம் அமைந்திருக்கும்,அன்றைய காலத்தில் அந்த குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு பலரையும் ஈர்த்தது மட்டுமில்லாமல்,எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய நடிகராக வருவார் என்று பலரும் கூறினார்கள்.அவர்கள் சொன்ன மாதிரியே தற்போது அந்த குழந்தை நட்சத்திரம் தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக கொடிக்கட்டி பறக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் “Icon Star” என போற்றப்படும் அல்லு அர்ஜுன்,புஷ்பா படத்தின் மூலம் இந்திய சினிமா முழுவதும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். இவர் இந்த படத்திற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்த்தித்தாலும்,புஷ்பா படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
சமீபத்தில் வெளியான ‘புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் பல சவால்களை சந்தித்தாலும் 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை ருசித்தது,இதனால் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.