ARTICLE AD BOX
நெட்பிளக்ஸில் விரைவில் வெளியாகும் படம் டெஸ்ட். மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது.
இதையும் படியுங்க : கல்யாணம் ஆகும் என காத்திருந்த நாயகி… 49 வயதிலும் முரட்டு சிங்கிள்!!
இதில் பங்கேற்று பேசிய நடிகர் மாதவன், பல சுவாரஸ்ய தகவல்களை பரிமாறினார். அப்போது சீமான் நடித்த தம்பி படம் குறித்து பேசிய அவர், நான் சீமானை போலவே வாழ்ந்தேன், அவர் தம்பியாக வாழ்ந்துள்ளார் என்பதை பிறகு தான் புரிந்து கொண்டேன்.
இயக்குநர் ஏன் அப்படி நடிக்க சொல்கிறார்கள் என்பதை ஒவ்வொரு படம் பண்ணும் போது புரிந்துகொள்வேன். அதே போல சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் படத்தில் நான் படம் முழுவதும் கமல் சாருடன் வருவேன் என கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
ஒரு கட்டத்தில் நான் கமல் சாரை அடிக்க வேண்டிய கட்டாயம். நான் முடியவே முடியாது என மறுத்துவிட்டேன். கமல் சார் படப்பிடிப்பில் என்னை கோபப்படுத்தினார். சட்டென கோபம் வந்து நான் அறைந்துவிட்டேன்.
படப்பிடிப்பு முடிந்தது சாரி சார் சாரி சார் என கெஞ்சினேன். ஆனால் அவரோ போய் ஷாட் எப்படி வந்திருக்கு என பார் என கூறிவிட்டு சென்றார். இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என மாதவன் கூறினார்.