கமல் வெளியிட்ட திடீர் வீடியோ! மன்னிப்பு கேட்க தயார்?- அதிர்ச்சியில் ரசிகர்கள்…

2 weeks ago 23
ARTICLE AD BOX

கெத்தாக நின்ற கமல்ஹாசன்

“தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து பேசும்போது, “கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமாரின் குடும்பம் என்னுடைய குடும்பம். அதனால்தான் இங்கு வந்திருக்கிறார்” என்று கூறிய அவர், “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என்று கூறினார். 

இவர் இவ்வாறு கூறியது கர்நாடகாவில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த “கமல்ஹாசன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது” என கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்களும் கர்நாடகா அரசியல்வாதிகளும் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். 

kamal haasan wishes 40 years of shivarajkumar

இதனை தொடர்ந்து கமல்ஹாசன் நீதிமன்றத்தை நாட, நீதிமன்றமும் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை. 

இதனிடையே கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியபோது சிவராஜ்குமார் ஆமாம் என்பது போல் தலையாட்டியதாக அவரை கன்னடர்கள் பலர் திட்டித் தீர்த்தனர். எனினும் சிவராஜ்குமார் “நான் தலையாட்டவில்லை” என கூறி அவர்களின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்தார்.

கமல் வெளியிட்ட வீடியோ

கன்னட நடிகர் சிவராஜ்குமார் திரையுலகில் 40 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்த நிலையில் அவரது ரசிகர்கள் #Shivanna40 என்ற ஹாஷ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசன் சிவராஜ்குமார் திரையுலகிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பார்க்காத அன்பு. அதற்கு காரணம் நாங்கள் எல்லோரும் ஒரே ஸ்டூடியோவில் வளர்ந்த பிள்ளைகள். அந்த உறவு கடைசி வரைக்கும் நீடித்து அவருக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என கூறிய அவர், “சிவண்ணாவை பொறுத்தவரை இந்த 40 வருடங்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அவர் மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து அவரது அப்பாவின் வழியில் சாதித்துக்கொண்டிருக்கும் விஷயம், இனியும் சாதிக்கப்போகும் விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. 

kamal haasan wishes 40 years of shivarajkumar

நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். மேலும் நிறைய திரைப்படங்களில் நடிக்கவேண்டும். உங்களது 50 ஆவது ஆண்டில் மீண்டும் பேசுவோம். நமது அன்பு எப்போதும் நிலைத்திருக்கும்” என கூறி கன்னட மொழியில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் இவ்வாறு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் ரசிகர்கள் பலரும், “மன்னிப்பு கேட்கத்தான் வீடியோ வெளியிட்டிருப்பாரோ என்று நினைத்தோம். நல்ல வேளை அவர் அப்படி எதுவும் கேட்கவில்லை” என நிம்மதி அடைந்துள்ளனர். 

Fourty years of @NimmaShivanna's cinematic brilliance! My SON, a die hard FAN — I salute this milestone, a testament to his father's enduring path. Looking forward to celebrating the 50th! Be Well, Be Happy – #KamalHaasan♥️#Shivanna40#Shivarajkumar pic.twitter.com/W3RbpyonnZ

— SundaR KamaL (@Kamaladdict7) June 10, 2025
  • kamal haasan wishes 40 years of shivarajkumar கமல் வெளியிட்ட திடீர் வீடியோ! மன்னிப்பு கேட்க தயார்?- அதிர்ச்சியில் ரசிகர்கள்…
  • Continue Reading

    Read Entire Article