ARTICLE AD BOX
புதுமைனா கமல்ஹாசன்தான்!
சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் தற்போது திரைப்பட விநியோகத்திலேயே ஒரு தலைகீழ் மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளாராம் கமல்ஹாசன்.
டிஜிட்டல் விநியோகம்
அதாவது ஒரு திரைப்படம் வெளியாகி 4 வாரங்களிலேயே அத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவிடும். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதாவது 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகிவிடுவதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துப்போனதாக திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கண்ணீர் வடித்தனர். இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தற்போது ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளாராம்.
அதாவது தான் தயாரித்து நடித்த “தக் லைஃப்” திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனத்தாரிடம் கமல்ஹாசன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கும் ஓடிடியில் வெளியாவதற்கும் இடையே 8 வாரங்கள் இடைவெளி இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கத்திற்கு அதிகமாக வர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனை பின்பற்றி பின்னாளில் இதனை பல தயாரிப்பாளர்களும் கடைபிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

6 months ago
65









English (US) ·