ARTICLE AD BOX
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் 3 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்க: கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!
டிஆர்பி ரேட்டில் முன்னிலையில் உள்ள இந்த சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ளது. இந்த சீரியலில் நடித்து வந்த நடிகை அமுதா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், பினாயில் எடுத்து குடித்து தற்கொலை முயற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை அமுதா. அதில், நான் நல்லதா இருக்கேன், யாரோ வேண்டுமென்றே வதந்தியை பரப்புராங்க. யாரும் அதை நம்ப வேண்டாம்.
நான் தற்போது சொந்த கிராமத்தில் உள்ளேன. முற்றிலும் போலியான செய்தி, தயவுகூர்ந்து யாரும் நம்ப வேண்டாம் என விளக்கமளித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்க சீரியலுக்கு எப்போ நடிக்க வருவீர்கள் என்றும், பொய்யான செய்தியை ஏன் வெளியிடுகிறார்கள் என நெட்டிசன்கள் கடிந்து கொண்டனர்.
