ARTICLE AD BOX
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த இந்த திரைப்படம்,எதிர்பார்ப்பை மீறி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்க: தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!
படம் வெளியாகும் முன்பே ட்ரெய்லர் சில விமர்சனங்களை சந்தித்தது,குறிப்பாக,சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்துடன் ஒப்பீடு செய்யப்பட்டது,ஆனால்,படம் வெளியாகிய பின்னர் அனைவருக்கும் இது ஒரு தனித்துவமான கதையமைப்பைக் கொண்டிருப்பது உறுதியானது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கயாடு லோஹர் ரோலை பற்றி ஒரு சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்,இதில் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது கயாடுதான்,பிறகு அவருக்கு அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று நினைத்ததால் பல்லவி ரோலை கயாடுவுக்கு கொடுத்தேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்,மேலும் இப்படம் வசூலில் 150 கோடி நெருங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிராகன் படத்தின் வெற்றியால்,கயாடு லோஹருக்கு தமிழ் திரையுலகில் பெரும் கவனம் கிடைத்துள்ளது. ரசிகர்கள் இவருடைய நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.

7 months ago
96









English (US) ·