ARTICLE AD BOX
கருணாநிதியை விட கேடுகெட்ட ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறர் ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து தரைகுறைவாக பேசினார். இதனால் டிஜிபி அலுவலகம் வந்த ஏர்போட்ட மூர்த்தி மீது விசிகிவனர் தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு ஏர்போர்ட் மூர்த்தி தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து விசிகவினரை தாக்கினார். இதையடுத்து விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்களைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 – 2011 ஆட்சிக்காலத்தை விட, கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் திரு ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளார்.
.
