ARTICLE AD BOX
தீபாவளியை டார்கெட் செய்யும் கருப்பு?
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கருப்பு”. இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் ஷிவதா, ஸ்வாசிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார். சாய் அப்யங்கர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இத்திரைப்படத்தின் டீசரில் இத்திரைப்படம் தீபாவளி ரிலீஸ் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஓடிடி நிறுவனத்தின் நிபந்தனை
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதற்கான வாய்ப்புள்ள காரணத்தினால்தான் தீபாவளி ரிலீஸ் என்று டீசரில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என ஒரு தகவல் வெளியாகிறது. அதாவது “கருப்பு” படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்றும் விற்கப்படவில்லையாம். அது விற்கப்பட்ட பின்புதான் வெளியீட்டு தேதி நிச்சயமாகுமாம்.
ஆனால் சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனமோ “கருப்பு” படத்தை மட்டுமல்லாமல் “கைதி 2” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் கேட்கிறார்களாம். “கருப்பு” படத்தை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபுதான் லோகேஷ் கனகராஜ்ஜின் “கைதி 2” திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

ஆதலால் “கருப்பு” படத்துடன் “கைதி 2” படத்தையும் அவர்கள் கேட்கிறார்களாம். ஆனால் “கைதி 2” படத்திற்கான பட்ஜெட் இன்னும் முடிவாகாத நிலையில் எதன் அடிப்படையில் டிஜிட்டல் உரிமத்தை விற்பது என எஸ் ஆர் பிரபு நிறுவனம் குழப்பமடைந்துள்ளதாம். இவ்வாறு “கருப்பு” படத்திற்கு “கைதி 2” ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது.
