ARTICLE AD BOX
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்புக்கு காரணமாகியது. இந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க விஜயோ அல்லது தாமோ செல்வதை தடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கரூர் சம்பவத்திற்குப் பிரதான காரணம் காவல்துறையின் அலட்சியமே எனவும், அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளும் சில குண்டர்களும் நேரடியாக தொடர்புடையவர்கள் எனவும் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

2 months ago
54









English (US) ·