கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!

7 hours ago 3
ARTICLE AD BOX

சமூக சேவை செய்யும் KPY பாலா!

விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா. இவர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பல கவுன்ட்டர் ஜோக்குகளை அள்ளி வீசி ரசிகர்களை மகிழ்வித்தார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இதனிடையே பல யூட்யூப் சேன்னல்களின் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். 

actor kpy bala built house for two poor families with the salary amount

இவ்வாறு பல நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி திரைப்படங்களிலும் நடித்து வந்த பாலா, அதன் மூலமாக தனக்கு வந்த வருவாயை கொண்டு அன்றாட வாழ்வில் கஷ்டப்படும் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா!

KPY பாலா “காந்தி கண்ணாடி” என்ற  திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இத்திரைப்படத்தில் KPY பாலாவுடன், பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்குகிறார். ஜெயிகிரண் என்பவர் தயாரிக்கிறார். 

actor kpy bala built house for two poor families with the salary amount

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய பாலா, “காந்தி கண்ணாடி படத்திற்காக வந்த சம்பளத்தை வைத்துதான் இரண்டு குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துள்ளேன். நான் படம் நடிப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ் மக்கள் போட்ட பிச்சைதான். அதற்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என கூறியுள்ளார். நடிகர் பாலா தான் இரண்டு ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துள்ளதாக கூறிய நிலையில் ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 

  • actor kpy bala built house for two poor families with the salary amount கர்ண பிரபுவாக மாறிய KPY பாலா? ரீல் ஹீரோ To ரியல் ஹீரோவாக மாறிய சம்பவம்!
  • Continue Reading

    Read Entire Article